Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, October 29, 2018

ஆசிரியரை சரமாரியாக இரும்பு ராடால் தாக்கிய மாணவன் : பதற்றத்தில் பள்ளி நிர்வாகம் !!!

Currently online
டெல்லியில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளி ஒன்றில் 8 ஆம் வகுப்பு படித்து வரும்  மாணவன் ஒருவன் அவ்வப்போது ஸ்கூலுக்கு கட் அடித்து ஊர் சுற்றுவதை வழக்கமாக வைத்துள்ளான்.

குறித்த மாணவன்  நீண்ட நாள் கழித்து பள்ளிக்கு சென்றுள்ளான். அப்போது ஆசிரியர் ஒருவர் அந்த மாணவனிடம் ஏன் இவ்வளவு நாள் லீவ் எடுத்தாய் என கேட்டு அந்த மாணவனை கண்டித்துள்ளார்.

குறித்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த அந்த மாணவன் தன் பையில் வைத்திருந்த இரும்பு ராடால் ஆசிரியரை சரமாரியாக தாக்கியுள்ளான். உடனடியாக சக மாணவர்கள் அந்த மாணவனை தடுத்து நிறுத்தினர். படுகாயமடைந்த ஆசிரியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும்  இதுகுறித்து பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலீஸார் அந்த மாணவனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவன் ஆசிரியரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.