Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, October 30, 2018

தனது பெற்ற மகளையே எரித்து கொலை செய்த தந்தை : ஆந்திரப் பிரதேசத்தில் சம்பவம் !!!

Currently online
ஆந்திராவில் வேற்று ஜாதிப் பையனை காதலித்த மகளை அவரது தந்தையே எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நாகிரெட்டிபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சைதன்யா. இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆவுலையா என்பவரின் மகள் இந்திரஜாவை காதலித்து வந்தார். இந்த காதலுக்கு இந்திரஜாவின் தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் தந்தைக்கும் மகளுக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்த நிலையில், கிராமத்தின் ஒதுக்குபுறத்தில் இந்துஜாவின் எரிந்த உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில்,  இந்த கொடூர செயலில் ஈடுபட்ட அவரது தந்தையை போலீஸார் கைது செய்துள்ளனர். பெற்ற மகளை தந்தையே எரித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு அங்கு  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.