3-வது இளையோர் (யூத்) ஒலிம்பிக் போட்டி அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நடைபெற்றுவருகிறது.
இதில் நேற்று நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி 244.2 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.
தென்கொரியா வீரர் சுங் யுன்ஹோ 236.7 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், சுவிட்சர்லாந்து வீரர் சோலரி ஜாசன் 215.6 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த 16 வயதான சவுரப் சவுத்ரி இந்த ஆண்டில் நடந்த ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று அனைவரின் கவனத்தை தன்பக்கம் ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.