Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, October 13, 2018

இறால் பக்கோடா செய்வது எப்படி ??

Currently online
தேவையான பொருட்கள்
இறால் - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 2 ( நீளமாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் - 1
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் - 2 சிட்டிகை
கடலை மாவு - 2 டீஸ்பூன்
அரிசி மாவு - 2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு

ஊற வைக்க:
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு- 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை

மஞ்சள்தூள், உப்பு, எலுமிச்சை சாறு, மிளகாய்த்தூள், சுத்தம் செய்யப்பட்ட இறால் சேர்த்து நன்றாக கலந்தது 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

பிறகு, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை, சீரகத்தூள். தனியாதூள், அரிசி மாவு, கடலை மாவு உப்பு சேர்த்து நன்றாக இறாலுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் தயாராக வைத்திருக்கும் இறால் மற்றும் இதர பொருட்கள் சேர்ந்த கலவையைச் சிறிது சிறிதாக எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சுவையான இறால் பக்கோடா  தயார்!

சூடான இறால் பக்கோடாவை, தக்காளி சோஸ் உடன் சேர்த்து பரிமாறலாம்.


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.