Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, October 29, 2018

மாயமான விமானம் பற்றிய மற்றுமொரு தகவல் !!!

Currently online
விமான நிலைய அதிகாரிகள் நடு வானில் மாயமான விமானம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். குறித்த விமானம் ஜாவா கடற்பகுதியில் விழுந்து நொறுங்கியதாக தெரிகிறது. அதோடு விமானத்தின் பாகங்கள் அந்த கடற்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனால் 189 பேரின் நிலை என்ன என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விமானத்தின் உதிரிபாகங்களும், அதன் எரிப்பொருளும் கடலில் மிதக்கின்றதான தகவல் வெளியாகியுள்ளது.

விமானம் காணாமல் போனதற்கு முன்பாக 5000 அடி உயரத்தில் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. 3,650 அடி உயரத்தில் பறந்த போது விமானத்தின் தொடர்பு பதிவாகியுள்ளது.

மேலும் விமானத்தின் கருப்பு பெட்டியை தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. விமானத்தில் பயணம் செய்தவர்கள் உயிருடன் இருக்க வேண்டும் என பிரார்த்திக்கிறோம் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். பயணிகளையும் ஊழியர்களையும் மீட்க கப்பல் மூலம் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.