Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, October 08, 2018

ஏன் என்னை மறந்தாய்......... ????

Currently online
காரணம் இல்லாத பிரிவுக்கு
கண்ணீர் மட்டுமே பரிசானது
வேதனைகள் தந்த நினைவுகளுக்கு
வெறுமை ஒன்றே உறவானது .....

சோதனைகள் பல தாண்டியும்
சொந்தம் கொள்ள முடியாதுபோனது
வார்த்தைகளில் உண்மை இல்லாததால்
வாழ்வும் இங்கே கேள்வியானது .....

எத்தனை முறைகள் தானிந்த
ஏமாற்றங்களையும் தோல்விகளையும்
உடைந்துபோன உள்ளமும் தாங்கிக்கொள்ளும் - இனியும்
யார் வடிவில் யார் வந்து ஏமாற்றுவார்களோ நானறியேனே ?

மனம் என்று ஒன்றிருப்பதை
மறந்திட வேண்டாம் யாருமே
மறந்தும் வலிகளையும் காயங்களையும்
மனதிற்கு தந்திட வேண்டாம் என்றுமே !

         நன்றி 
நிவேதா நிவேதிகா.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.