Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, October 27, 2018

ரணிலுக்கு ஆதரவாகவும் மஹிந்தவுக்கு எதிராகவும் அலரி மாளிகைக்கு முன் ஆர்ப்பாட்டம் !!

Currently online
மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐ.தே.க. ஆதரவாளர்கள் இன்று (27) காலை அலரி மாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

ஐ.தே.க. ஆதரவாளர்கள் கொழும்பின் பல பகுதிகளிலுமிருந்து அலரி மாளிகை வளாகத்திற்கு சென்று ரணிலுக்கு ஆதரவாகவும் மஹிந்தவுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பி வருகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு இலங்கைப் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துள்ள நிலையில், அது அரசியலமைப்பிற்கு முரணானதென ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், அவர் அலரி மாளிகையிலிருந்து வெளியேற வேண்டுமென மஹிந்த அணியினர் குறிப்பிட்டுள்ளதோடு, அவ்வாறு வெளியேறாவிட்டால் அலரி மாளிகையை சுற்றிவளைப்போம் என குறிப்பிட்டுள்ளனர். 

இதனை அடுத்து அலரி மாளிகைக்கு முன்பாக ஐ.தே.க. ஆதரவாளர்கள் கூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.