Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, October 25, 2018

விமான இறக்கையில் சாகசம் ; பரிதாபமாக உயிரிழந்த பாடகர் !!

Currently online
விமானத்தில் சாகசம் செய்து பாட முயற்சித்த கனடாவைச் சேர்ந்த பாடகர் ஒருவர்  கீழே விழுந்து பலியாகியுள்ளார். 

கனடாவை சேர்ந்த ஜோன் ஜேம்ஸ் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவர் பாடகர் மட்டுமில்லாமல் சில சிறிய சினிமாக்களை இயக்கியும் நடித்தும் இருக்கிறார். விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து பல வித்தியாசமான சாதனைகளை செய்து இருக்கிறார்.

ஜோன் ஜேம்ஸ் பாடிக்கொண்டே விமானம் மூலம் சாகசம் செய்ய முடிவெடுத்துள்ளார். 

அதன்படி விமானத்தின் இறக்கையில் ஏறி நின்று, விமானம் பறந்த பின் இறக்கையிலேயே நின்று கொண்டு பாட்டு பாட முடிவெடுத்துள்ளார். இதற்காக கடந்த சில நாட்களாக மிக சரியாக பயிற்சியும் செய்துள்ளார்.

இந் நிலையில் நேற்று 5000 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் அந்த சிறிய விமானம் பறந்து கொண்டிருந்த போது இறக்கையில் ஏறி பாட்டு பாட சென்றுள்ளார். ஆனால் இறக்கையின் நுனிக்கு சென்றதால் இவர் நிலைதடுமாறி உள்ளார். அந்த நேரம் பார்த்து விமானமும் லேசாக கவிழ்ந்துள்ளது இதில் விமானி சுதாரிக்கும் முன் இவர் கீழே விழுந்துள்ளார்.

பரசூட் கட்டியிருந்த அவர், அதை விரிக்கும் முன் பூமியை அடைந்தார். அதிவேகமாக கீழே விழுந்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 

இந்த சம்பவம் கனடா மக்களையும், அவரது ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.