Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, October 26, 2018

வெகு விரைவில் புதிய அரசாங்கத்தை உருவாக்குவேன் ; மஹிந்த சூளுரை !!

Currently online
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ரணில் - மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பில் தன்னால் பாதுகாக்கப்பட்டுவந்த பௌத்த தர்மத்திற்கு பாரிய சவால் விடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் வெகு விரைவில் மக்கள் எதிர்பார்க்கின்ற புதிய அரசாங்கத்தை அடுத்த தேர்தலின் பின்னர் அமைத்துக் காட்டுவதாகவும் மஹிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார்.

நேற்றைய தினம் கால – அம்பலாங்கொடை பிரதேசத்திலுள்ள வெல்துவ ஸ்ரீ தபோதாராம விகாரைக்கு விஜயம் செய்திருந்த மஹிந்த ராஜபக்ச, அங்கு நடைபெற்ற சமய வழிபாட்டில் கலந்துகொண்டார். 

பின்னர் அதனைத் தொடர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் கூட்டத்திலும் உரையாற்றிய  மஹிந்த ராஜபக்ச கூறியதாவது ;

பௌத்த மதத்தின் தேவைப்பாட்டினை உணர்ந்த கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையை விடவும் பௌத்த அரசியல்வாதிகளுக்கு அதன் பெறுமதி உணராதிருப்பது தொடர்பாக கவலையடைவதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை அடுத்த தேர்தலை நல்லாட்சி அரசாங்கம் நடத்தும் பட்சத்தில் புதிய அரசாங்கத்தை அதன் பிறகு அமைத்துக்காட்டுவதாக சூளுரைத்தார்.

அடுத்த தேர்தலுக்கு முன்னரே புதிய அரசாங்கத்தை உருவாக்க முடியுமானால் அதுவும் சிறந்ததே என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.