Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, October 26, 2018

விக்ராந்த்தின் படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதிய விஜய் சேதுபதி !!

Currently online
தனது தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் விஜய் சேதுபதி. சக நடிகர்கள் மீது அக்கறை செலுத்துவதிலும் முன்மாதிரியாக இருக்கிறார். 

இதுகுறித்து இயக்குநரும், நடிகர் விக்ராந்தின் சகோதரருமான சஞ்சீவ் ஒரு பேட்டியில் கூறியதாவது: 
நான் விஜய் சேதுபதிக்காக ஒரு கதையை எழுதினேன். அவரை நேரில் பார்த்து கதையைச் சொன்னபோது அவருக்குக் கதை மிகவும் பிடித்தது. ஆனால் இந்தக் கதை என்னை விட விக்ராந்துக்குப் பொருத்தமாக இருக்கும் என்றார். அத்துடன் இந்தப் படத்துக்கு நானே வசனம் எழுதட்டுமா என்றும் கேட்டார். 

ஏற்கெனவே விஜய் சேதுபதி ஆரஞ்சு மிட்டாய் படத்துக்கு வசனம் எழுதிய அனுபவம் இருந்தபோதும் தற்போது உள்ள நேர நெருக்கடியில் இது சாத்தியமா என்கிற சந்தேகம் சஞ்சீவுக்கு எழுந்துள்ளது.

ஆனால் தினமும் படப்பிடிப்புப் பணிகள் எல்லாம் முடித்துவிட்டு இரவு நேரங்களில் அப்படத்தின் கதை திரைக்கதை குறித்து சஞ்சீவுடன் ஓயாது விவாதித்த விஜய் சேதுபதி சொன்னபடி திரைக்கதையை உருவாக்கி, வசனமும் எழுதிக் கொடுத்துள்ளார். 

திரைக்கதையை இயக்குநருடன் இணைந்து செய்துள்ள விஜய் சேதுபதி, வசனத்தைத் தனி ஆளாகக் கையாண்டுள்ளார். 

இதுகுறித்து சஞ்சீவ் கூறுகையில், நானும் என் சகோதரர் விக்ராந்தும் அவருக்கு எப்போதும் நன்றிக் கடன்பட்டுள்ளோம் நவம்பர் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என்று கூறினார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.