வட அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் ஜெசிகா மற்றும் கெண்டல் ஜேம்ஸ். இருவரும் காதலித்து வந்த நிலையில், 2018-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் திகதி திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீயணைப்புத்துறை வீரரான ஜேம்ஸ், எதிர்பாராத விதமாக கார் விபத்தில் உயிரிழந்தார். அதிர்ச்சியில் உறைந்த ஜெசிகா, தன் காதலனின் நினைவை வேறு விதமாகக் போற்ற முடிவு செய்தார்.
திருமணம் நிச்சயிக்கப்பட் நாளான செப்.29-ம் திகதி, ஜெசிகா தங்களின் பாரம்பரிய திருமண உடையினை அணிந்து மணப்பெண் கோலத்தில், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு ஜேம்ஸின் கல்லறைக்குச் சென்று மணநாளைக் கொண்டாடியுள்ளார்.
தி லவ்விங் லைஃப் போடோகிராஃபி என்ற புகைப்பட நிறுவனம், கெண்டல் உயிருடன் இருந்திருந்தால் இருவருக்கும் எப்படி திருமணம் நடந்திருக்குமோ அவ்வாறே புகைப்படங்களை எடுத்தது. இதை கடந்த 5-ம் திகதி தன் ஃபேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டுள்ளது.

இதயத்தை உலுக்கும் புகைப்படங்களை பார்த்த அனைவரும், ''ஜேம்ஸின் ஆன்மா எப்போதும் ஜெசிகாவுடன் இருக்கும்'' என பதிவிட்டுள்ளனர்.