Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, October 12, 2018

பெற்றோர் வற்புறுத்தியதால் தன்னைத் தானே திருமணம் செய்த பெண் !!

Currently online
பெற்றோர் திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தியதன் காரணமாக பெண் ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டுள்ளார்.

உகாண்டாவைச் சேர்ந்த லுலு ஜெமிமா (வயது-32) என்ற பெண் லண்டனிலுள்ள ஒக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படித்து வருகிறார். 

இந்நிலையில், லுலு ஜெமிமாவிடம் திருமணம் செய்துகொள்ளுமாறு அவரது பெற்றோர் பல ஆண்டுகளாக வற்புறுத்தியுள்ளனர். பல்வேறு காரணங்களுக்காக திருமணத்தை தவிர்த்து வந்த லுலு, கடைசியாக திருமணம் செய்துகொள்வதற்கு சம்மதித்தார். ஆனால், ஒரே வித்தியாசம் இத்திருமணத்தில் மணமகனே கிடையாது.

இதுகுறித்து லுலு ஜெமிமா கூறுகையில், 
``எப்போது திருமணம் செய்துகொள்வாய் என்று என்னை பலரும் நச்சரித்து வந்தனர். எனக்கு படிப்பு தான் முக்கியம். மேலும், வாழ்நாள் முழுவதும் என்னை நன்றாக கவனித்துக் கொள்ள கூடிய நபரை திருமணம் செய்ய நினைத்தேன், அதனால், நான் என்னையே திருமணம் செய்துகொண்டேன்’ என்றார்.

பிறர் அளிக்கும் நன்கொடை மூலம் படித்து வரும் லுலு ஜெமிமா, அவரது திருமணத்துக்கு செலவு செய்த தொகை எவ்வளவு தெரியுமா? வெறும் 2 பவுண்ட் இந்த தொகையும், அவர் வீட்டிலிருந்து திருமணம் நடந்த இடத்துக்கு வாடகை காரில் வந்ததற்காக ஆன செலவாம்.

திருமணத்தின்போது லுலு ஜெமிமா அணிந்த ஆடை அவரது நண்பர் பரிசாக கொடுத்துள்ளார். திருமணத்தில் வெட்டப்பட்ட கேக்கை அவரது சகோதரர் வாங்கித் தந்துள்ளார். திருமணத்தில் பங்கேற்றவர்கள் அவரவர்கள் சாப்பிட்ட செலவை அவரவர்களே ஏற்றுக்கொண்டுள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.