Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, October 13, 2018

புரியாத ப்ரியம்...........!!!!!!!!! எஸ்.பி.லக்குனா

Currently online
உனக்கான என் காதல்
மண்ணோடு புதையாதடி
மனசோடு நிறைந்ததடி
நினைவோடு கலந்ததடி

மனசெல்லாம் ஏக்கமடி
தினம் என்னை தாக்குதடி
நெஞ்சினிலே பூத்ததடி
உன் கல்லறையிலும் பூக்குமடி

ப்ரியமான இதயத்தை
நீ பறித்துக் கொண்டாய்
புரியாமல் ப்ரியத்தை
ஏன் விட்டுச் சென்றாய்

என்னாளும் உன் தோளை 
நான் தாங்கினேன்
இன்னாளில் உன் தோளை
யார் தாங்குவார்

பிரிந்து நீ போனது
நியாயமாடி
புரிந்து தான் போனியா
நீயுமடி

புரியாத என் ப்ரியத்தை
நீ தவற விட்டாய்
முடிவில்லா என் காதலுக்கு
முடிவுரை எழுத முன்
நீ தவறி விட்டாய்.

      நன்றி 
எஸ்.பி.லக்குனா
   வட்டக்கச்சி.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.