Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, October 10, 2018

யாதுமறியாதவள்...........!!!!! கவிப்பிரியை சுஜனி

Currently online

தனிமைப்படுத்தப்பட்ட அவளுக்கான தருணங்களில் யாதும்மறியாதவளாய் கண்ணாடிமுன் நின்று அவன் முகம்தேடி
எண்ணங்களை சுவைக்கின்றாள்!

சாளரங்கள் இன்றிய அறையொன்றினுள் காலியான வாசனைப் டப்பாவிற்குள் எழுதுமுனை உடைந்த எழுதுகோல் ஒன்றை புகுத்தி அறையெங்கும் ஒளிரச்செய்து
அவன் நினைவுகளில் அவள் முகம் புதைக்கின்றாள்!

அவனின் முத்தங்களுக்காய் காத்திருந்த
கன்னம் உதட்டோடு உதடு ஈரம்படாத இரவுகளில் அடைகாத்த கோழியைப்போல்
அறையெங்கும் உலாவுகின்றாள்.

தொட்டி மண்ணிற்குள் இடப்பட்ட விதையின்
மெளனத்தை துணைக்கு அழைத்து சமயலறையின் வெம்மையிலும்
குளியலறை அரை நிர்வாணத்தையும்
படுக்கறை மோகத்தையும் சிறைப்படுத்தி அவற்றின் அமைதியினை கட்டித் தழுவிக்கொண்டு அதன் வீரியத்தினால் இளமையினை துளிர்விடச்செய்து மகிழ்கின்றாள்!

கண்ணாடித்துகள்கள் பதிக்கப்பட்ட
முடிவில்லா நீண்ட சுவரினில் இரத்தம்
சிந்த நடக்கும் ஒரு பூனையைப்போல்
மீளாவலிதரும் நீளும் நினைவுகளில் நடக்கின்றாள்!
அழுகையின் காரணம்மின்றி கண்ணீரிடம்
வினா எழுப்பிகண்ணாடியில் விம்பம் உடைக்கின்றாள்!

வலையில் மாட்டிய பறவையைப்
போல் எதிர்பாராத விபத்தொன்றிற்கு
அவள் காத்திருக்கின்றாள்!
அது அவளின் மரணமாக இருக்கலாம்
அல்லது அவளது சுயத்தை இழக்கலாம்
நேற்றைய கனவில் தோன்றிய பிறக்காத
குழந்தையின் முத்தமாக இருக்கலாம்!.
[யாவும் கற்பனையே]
         
            நன்றி
கவிப்பிரியை சுஜனி

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.