Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, October 11, 2018

வைரலாகும் விஜய் சேதுபதியின் புகைப்படம் !!

Currently online
'சயீரா நரசிம்ம ரெட்டி' என்னும் வரலாற்றுப் படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வருகிறார். 

டோலிவுட்டின் பிரமாண்டமான வரலாற்றுப் படமாகக் கருதப்படும் இந்த படத்தில், அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு, நயன்தாரா, தமன்னா, `நான் ஈ' சுதீப் என மிகப் பெரிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஜார்ஜியாவில் நடந்துவரும் படப்பிடிப்பில், விஜய்சேதுபதியும் கிச்சா சுதீப்பும் சமீபத்தில் இணைந்தனர். இவர்கள் இருவரும், அவர்களது கெட்டப்பிலிருக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் சுற்றிவருகிறது. 

சிரஞ்சீவி - நயன்தாரா திருமணக் காட்சிகள் படமாக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட போட்டோக்கள், டீசர் ஆகியவை ஏற்கெனவே வைரலானது. 

ராஜா நர்சிம்ம ரெட்டியின் `விசுவாசி ஓபயா' எனும் கதாபாத்திரத்தில் நடித்துவரும் விஜய்சேதுபதி, தமிழ் பேசி நடிப்பதும் குறிப்பிடத்தக்கது. 

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் உருவாகிவரும் இப்படம் அடுத்த வருடம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.