Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, October 25, 2018

சிறைச்சாலையில் கணவரை பார்க்க சென்ற பெண் விளக்கமறியலில் !!

Currently online
40 வயதுடைய பெண் ஒருவர் கஞ்சா போதைப்பொருளை சிறைச்சாலைக்கு கொண்டு சென்ற குற்றச்சாட்டில் எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ; குறித்த பெண்ணின் கணவர் கடத்தல் சம்பவம் ஒன்றில் கைதுசெய்யப்பட்டு சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். 

அவரை பார்க்க சென்ற குறித்த பெண் கஞ்சா போதைப்பொருளுடன் திருகோணமலை சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.

குறித்த பெண்ணை சிறைச்சாலை அதிகாரிகள் சோதனை செய்த போது குறித்த பெண்ணிடம் இருந்து 152 மில்லி கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. 

இதையடுத்து குறித்த பெண் எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.