Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, October 30, 2018

மஹிந்தவை அவசரமாக நேரில் சந்திக்கும் இரா .சம்பந்தன் !!!

Currently online
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு இரு தரப்பும் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்ற பரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று சந்திக்கவுள்ளார்.

நாட்டில்  தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியின் மத்தியில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை பெற  பிரதான இரு கட்சிகளும் பெரும்பாடுபடுகின்றது.   மஹிந்த தரப்புக்காக, ரணில் தரப்புக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு என்பது தொடர்பில் அடுத்தகட்ட நகர்வுகள் இடம்பெறவுள்ளன.இந்நிலையில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து முக்கிய தீர்மானங்களை எடுக்கும் நடவடிக்கையில் சம்பந்தன் ஈடுபட்டுள்ளார்.

குறித்த சந்திப்பு இன்று காலை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது பல்வேறு கோரிக்கைகளை சம்பந்தன் முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும்  சந்திப்பில்  சுமுகமான தீர்வுகள் எட்டப்படும் பட்சத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலை முடிவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.