Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, October 10, 2018

சீஷெல்ஸின் உப ஜனாதிபதியை சந்தித்தார் இலங்கை ஜனாதிபதி !!!

Currently online
மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக சீஷெல்ஸ் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சீஷெல்ஸின் உப ஜனாதிபதி வின்சன்ட் மெரிடனுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு சீஷெல்ஸின் பிராஸ்லின் தீவில் நேற்று (09) பிற்பகல் இடம்பெற்றது.  

இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சீஷெல்ஸ் உப ஜனாதிபதி அமோக வரவேற்பு அளித்துள்ளார்.

இந் நிலையில் இலங்கைக்கும் சீஷெல்ஸுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 30 வருடங்கள் நிறைவடையும் இந்த சந்தர்ப்பத்தில் இடம்பெற்றுள்ள ஜனாதிபதியின் விஜயம் குறித்து சீஷெல்ஸின் உப ஜனாதிபதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த விஜயத்தின்போது ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட புதிய உடன்படிக்கைகளை இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் வகையில் பலமாக முன்நோக்கி கொண்டு செல்ல தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும்  சீஷெல்ஸின் உப ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சந்திப்பின்போது நினைவுகூரும் வகையில் நினைவுப் பரிசில்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.