Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, October 25, 2018

உருளைக்கிழங்கு மசாலா பூரி செய்யலாமா ??

Currently online
தேவையான பொருட்கள் :
கடலை மா – ஒரு கப்
கோதுமை மா – ஒரு கப்
உருளைக்கிழங்கு – 2
தயிர் – அரை கப்
மிளகாய்த் தூள் – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
மல்லித்தூள் – ஒரு தேக்கரண்டி
ஓமம் – அரை தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி – சிறிதளவு
கரம் மசாலா தூள் – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

உருளைக்கிழங்கை வேகவைத்து மிக்சியில் போட்டு நன்றாக மசித்து கொள்ளவும்.

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கடலை மா, கோதுமை மா, உப்பு, உருளைக்கிழங்கு, கொத்தமல்லி, தயிர், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள், ஓமம், சீரகம், கரம்மசாலா தூள் சேர்த்து ஒன்றாக கலக்கவும்.

இந்த மாவுடன் சிறிது எண்ணெய், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பூரி மாவாக பிசைந்து அரை மணிநேரம் ஊற விடவும்.

பிசைந்து வைத்துள்ள மாவிலிருந்து சிறு உருண்டையளவு மாவை எடுத்து தேய்த்து பூரியாக திரட்டவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்த மாவை போட்டு பூரியை பொரித்து எடுக்கவும்.

சுவையான உருளைக்கிழங்கு மசாலா பூரி தயார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.