Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, October 31, 2018

அவலத்தின் ஓலம்........!!!!!! வேலணையூர் ரஜிந்தன்

Currently online
மறக்க முடியுமா ? 
மனங்களில் ஆழப்பதிந்த 
மரண வடுக்களை...

உயிருக்காய் உருக்குலைந்த 
துயரக் கணங்களை...

உண்டு படுத்துறங்கி 
உயிர் வாழ்ந்த தாய் மண்ணை
ஒற்றை இரவில் 
விட்டகன்ற பேரவலம்...

கர்ப்பிணி மங்கையும்
கைக்குழந்தை மடந்தையும்
தள்ளாடும் வயோதிபரும் 
கால் நடையாய் நெடுந்தூரம்...

குமரியும் பாதை வழி
பிராணிகளும் நகர்ந்தபடி
போகுமிடம் யாரறிவார் 
கால் போன இடம் தேடி...

மூட்டை முடிச்சுக்களை
தலையில் முடிச்சுக்கட்டி
சின்னஞ் சிறுசுகளை 
இடையும் வலிக்கத் தாங்கி...

இருசக்கர வண்டியை 
இருட்டிலும் உருட்டியே 
அடிமேல் அடிவைக்க 
இடமில்லை சன நெருசல்...

பசிக்கும் பசியெடுக்கும் 
பயமும் உயிரெடுக்கும் 
பாவம் ஏதும் செய்யாமல் 
சிலுவை சுமந்த தமிழர் நாம்...

விமானப் பேரிரச்சல்களில்
எறிகணைச் சத்தங்களில் 
மிச்ச உயிரைக் காவிக்கொண்டு
மரண விளிம்பில் ஓடினோம்...

செம்மணி வெளி தாண்டி 
கைதடிப் பாலம் கடந்து 
தென்மராட்சி வன்னியென 
திசைதேடி தஞ்சம் கொண்டோம்...

1995.10.30 ஆம் அன்றுதான்... 
ஆண்டு பல கடந்தும்
இப்போதும் வலிக்கிறது !!


              நன்றி  
வேலணையூர் ரஜிந்தன்

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.