Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, October 09, 2018

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ கைது !!

Currently online
நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால் சாலையில் அமர்ந்து வைகோ தர்ணா போராட்டம் நடத்தினார்.

நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

சென்னையில் இருந்து புனே செல்லவிருந்த நக்கீரன் கோபாலை காவல்துறையினர் கைது செய்தனர். ஆளுநர் பணியில் தலையிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நக்கீரன் கோபால் கைது செய்யபட்டார்.

சென்னை ஜாம்பஜார் காவல் நிலையத்தில் நக்கீரன் கோபால் மீது சட்டப்பிரிவு 124 -ன் கீழ் வழக்குப் பதிவு  செய்யபட்டஉள்ளது. குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநரின் பணியை செய்ய விடாமல் உள்நோக்குடன் செயல்படுதல் பிரிவில் வழக்கு  பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சென்னை சிந்தாதிரிபேட்டை காவல் நிலையத்தில் நக்கீரன் கோபாலை சந்திக்க வந்த வைகோவிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. 

நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால் சாலையில் அமர்ந்து வைகோ தர்ணா போராட்டம் நடத்தினார். 

வைகோ கூறியதாவது;- 
நக்கீரன் கோபால்  மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. நக்கீரன் கோபாலை கைது செய்தது பத்திரிகையாளர்களை மிரட்டும் செயல். ஒரு வழக்கறிஞராக நக்கீரன் கோபாலை சந்திக்க வந்துள்ளேன்

சட்டவிதிகளின்படி வழக்கறிஞர் என்ற முறையில் நக்கீரன் கோபாலை சந்திக்க வந்துள்ளேன். நக்கீரன் கோபாலை சந்திக்க போலீசார் அனுமதி தரவில்லையெனில் அவமதிப்பு வழக்கு தொடுப்பேன். என கூறினார்.

இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட வைகோவை பொலிஸார் கைது செய்தனர். 

சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட வைகோவுக்கு, ஆதரவாக அவரது கட்சியினர் உள்ளிட்ட சிலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. 

இந்நிலையில், வைகோவை கைது செய்த பொலிஸார், அவரை வாகனத்தில் ஏற்றிச்சென்றுள்ளனர்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.