Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, October 09, 2018

சுடாமலே சுடும் வார்த்தைகள்...........!!!!!!!!!! நிவேதிகா

Currently online
கவிஞர்களின் கற்பனையில்
நிஜம் கலப்பது திறமை - ஆனால்
நிஜத்தினை கலைப்பதில்
கவிஞனுக்கில்லை பெருமை !

அடுத்தவர் பிழைகளை
சுட்டிக் காட்டுவதற்காக
கிடைத்தவர் வாழ்வினை - நீயும்
கெடுத்திட நினைக்காதே !

உத்தமனாக நீ இருந்தால்
உன்னை உலகிற்கு காட்டு
செத்தவர் வாழ்வினை
சித்திரம் வரைவதிலில்லை
வித்தகன் உன் திறமை !

எப்படியும் எழுதலாம்
எதையும் எழுதலாம் என்று
எண்ணிவிட வேண்டாம்
எதை எழுதுகிறாய் என்பதை
எண்ணிப்பார் ஒரு கணம் !

எழுத்துக்களுக்கு வலிமை அதிகம்
அதேபோல் வலிகளும் அதிகம்
வாழும்போது வாழ்த்திடாத வார்த்தைகள்
மலர்களாகி மணம் வீசுவதில்லை 
பிணமானவர் முன்னால் வந்து !

உத்தமரென்று எவருமில்லை
உலகின் நியதி இது தான்
உண்மையைச் சொல்ல துணிவிருந்தால்
உரத்துச் சொல்லு அவரவர் பெயர் சொல்லி !

சாடை மாடையில்
சாதிக்க நினைக்காதே என்றும்
சாக்கடையாகிக் கிடக்கும் உந்தன்
சிந்தனைச் சிதறல்களால் !

சரித்திரம் சொல்ல வேண்டும்
சாதனையாளர் யாரென்று
சத்தியம் வெல்ல வேண்டும்
உண்மையில் உயர்வு பெற்று !

சுட்டாலும் திருந்தாத ஜென்மங்களை
சுடுகாட்டினில் கட்டிப் போட்டு 
சுடுதணலைக் கொட்டுவது போல்
சுடாமல் சுடவேண்டுமென் வார்த்தைகள் !

          நன்றி 
நிவேதா நிவேதிகா
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.