Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, October 29, 2018

கொழும்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் போராட்டத்தால் திண்டாடும் மக்கள் !!!

Currently online
எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் இலங்கை முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளதாக துறைசார் தொழிற்சங்க அமைப்புகள் அறிவித்துள்ளனர்.

நேற்று பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைமையகத்தில் நடந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலே இந் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, ஊழியர் சங்கத்தின் உப தலைவர் பிரேமரத்ன கமகே தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் தங்கள் ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும்  பணி பகிஷ்கரிப்பு காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களின் ஊழியர்கள் பணியில் இருந்து நீங்கியுள்ளனர்.

இந்நிலையால்  பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாரிய மக்கள் வரிசை ஒன்றை அவதானிக்க முடிந்துள்ளது. சப்புகஸ்கந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் நடவடிக்கைகள் மாத்திரம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ந்து அதிகாரிகள் தங்களுக்கு பதிலளிக்கவில்லை என்றால் எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.