Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, October 09, 2018

''இது தான் உங்கள் நல்லாட்சியா??'' ; யாழிலிருந்து அநுராதபுரம் சிறைச்சாலை வரை நடைபவனி !!

Currently online
யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் யாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுரம் சிறைச்சாலை வரை நடைபவனி ஒன்று இன்று (9) காலை ஆரம்பமாகியுள்ளது.

குறித்த நடைபவனியானது சிறைச்சாலைகளில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்யுமாறும், சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்வதற்கான அரசியல் தீர்மானம் ஒன்றை அரசு எடுக்க வலியுறுத்தியும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினமும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

குறித்த  ஆர்ப்பாட்டத்தின் முடிவிலேயே நடைபவனிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

அதன்படி அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாக   யாழ்.பல்கலைக்கழக முன்றலில் இருந்து இன்று காலை ஆரம்பமாகிய நடைபவனி கிளிநொச்சி – வவுனியா ஊடாக அநுராதபுரம் சிறைச்சாலையை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.