Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, October 12, 2018

கோர விபத்து ; சம்பவ இடத்திலேயே இருவர் பலி !!

Currently online
கார் மற்றும் முச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து நேற்று மாலை 6 மணியளவில் வவுனியா ஹொரவப்பொத்தாத்தானை வீதியில் இடம்பெற்றுள்ளது.

கார் ஒன்று வவுனியாவில் இருந்து ஹொரவப்பொத்தானை வீதி வழியாக திருகோணமலை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோது வவுனியா, மயிலங்குளம் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி அவ் வீதி வழியாக பயணித்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து இடம்பெற்ற பகுதியில் இருந்து சுமார் 10 மீற்றர் தூரம் முச்சக்கர வண்டி இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இவ் விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா பொலிசார் இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.







jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.