Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, October 10, 2018

யாழில் இனம்தெரியாத நபர்களால் வாள்வெட்டு தாக்குதல் !!!

Currently online
வாள்வெட்டு குழுவினர் சற்றுமுன்னர் யாழ். கோண்டாவில் பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ். கோண்டாவில் பகுதியிலுள்ள சனசமூக நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பலசரக்கு கடை மீது வாள்வெட்டுக் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

மோட்டார் சைக்கிள்களில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்களே குறித்த தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோப்பாய் பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் அந்தப் பகுதியில் சிறப்பு அதிரடிபடையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவத்தையடுத்து அப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.