Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, October 25, 2018

முடி உதிர்வைத் தடுத்து முடி அடர்த்தியாக வளர இயற்கை வழிமுறைகள் !!

Currently online
முடி உதிர்வு பிரச்சனையை தடுத்து புதிய முடிகளின் வளர்ச்சியை தூண்டுவதற்கு இயற்கையான சில டிப்ஸ்களை தெரிந்துகொள்வோம்.

தலைமுடி வளர்வதற்கு என்ன செய்யலாம்?
முட்டை, தேன் மற்றும் அதனுடன் சிறிதளவு பால் சேர்த்து தலையில் ஹேர் பேக் போட்டு வந்தால் தலைமுடியின் வேர் கால்கள் வலிமையாகும்.

முக்கால் கப் தேங்காய் பாலை ஒரு ஸ்ப்ரே போத்தலில் ஊற்றி தலை முழுவதும் ஸ்ப்ரே செய்து வந்தால், தலைமுடி ஸ்ட்ரைட்னிங் ஆகும்.

வெந்தயத்தை ஒரு மணி நேரம் ஊறவைத்து நன்கு அரைத்து தலைமுடியின் வேர் கால்களில் படும்படி தடவி சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால், தலைமுடி நன்றாக வளரும்.

ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து குளிப்பதன் மூலம் தலைமுடி உதிர்வு குறையும். ஆனால் இதை தினமும் செய்யக் கூடாது. ஏனெனின் அதனால் முடி வறட்சி ஏற்படும்.

கொய்யா இலையை அரைத்து இரவு தூங்குவதற்கு முன் தலையில் தடவி மறுநாள் காலையில் கழுவி வந்தால் முடி உதிர்வு குறையும்.

முள்ளங்கி சாற்றை தலையின் அடியில் படுமாறு தடவி வந்தால் தலைமுடி உதிர்வது தடுக்கப்பட்டு, தலைமுடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

உருளைக்கிழங்கை வேகவைத்த தண்ணீரைக் கொண்டு, வாரம் ஒருமுறை முடியை கழுவி வந்தால், முடியின் வளர்ச்சி அதிகமாகும்.

வெங்காயத்தை நீரில் போட்டு வேக வைத்து, பின் அந்த நீரினால் முடியை கழுவலாம் அல்லது வெங்காய சாற்றை கொண்டு முடியில் மசாஜ் செய்து ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவலாம்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.