Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, October 08, 2018

பெற்ற குழந்தையை கொன்ற கொடூர தாய் ; நடந்தது என்ன ??

Currently online
குடும்பப்பெண் ஒருவர் பெற்ற குழந்தையை கொன்று விட்டு காணாமல் போய்விட்டதாக பொலிசாரிடம் புகார் அளித்த சம்பவம் சென்னையில் இடம்பெற்றுள்ளது.

சென்னை வேளச்சேரி பகுதியில் வசித்து வருகின்ற ஒரு தம்பதிக்கு கடந்த 35 நாட்களுக்கு முன்பு ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. 

இந் நிலையில், நேற்று வீட்டில் கதவை திறந்து கொண்டு தூங்கியபோது, தமது குழந்தையை யாரோ கடத்தி சென்றுவிட்டனர் என குறித்த தம்பதிகள் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார்  குழந்தையை தேடி வந்தனர். 

இதேவேளை குழந்தை காணாமல் போயும் கூட முகத்தில் எந்த சோகமும் இல்லாமல் இருந்த அந்த பெண்ணின் மீது பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

எனவே, அவரிடம் பொலிசார் விசாரணை செய்தபோது, பால் கொடுக்கும் போது ஏற்படும் வலியை தாங்கிக்கொள்ள முடியாததால், குழந்தையை கொன்றுவிட்டேன் என கூறியுள்ளார்.

அவர் கொடுத்த வாக்குமூலம் பொலிசாருக்கும், அவரின் கணவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதன் பின், ஓரிடத்தில் வீசப்பட்ட குழந்தையின் உடலை மீட்டு பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதுடன் ஈவிரக்கமின்றி பெற்ற குழந்தையை கொலை செய்த பெண்ணையும் கைது செய்துள்ளனர்.


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.