Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, November 09, 2018

பருத்தித்துறையில் 12 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் ; 19 வயது காதலன் கைது !!

Currently online
பருத்தித்துறையில் 19 வயதுடைய இளைஞனால் 12 வயது பாடசாலைச் சிறுமி ஒருவர் பாலியல் ரீதியாகவும் கூரிய ஆயுதங்களாலும் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம்  பருத்தித்துறை தம்பசிட்டி, பண்டாரி அம்மன் கோவிலடியில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.

நேற்றுமுன்தினம் மாலை தொடக்கம் சிறுமியை காணவில்லை என பெற்றோர் தேடியுள்ளனர். இதனையடுத்து அயலவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவத்தன்று 11 மணியளவில் இளைஞனின் வீடு தேடிச் சென்றபோது சிறுமி கையில் காயங்களுடன் காணப்பட்டுள்ளார். 

சிறுமியை மீட்டு மந்திகை வைத்தியசாலையில் அனுமதித்த பெற்றோர் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

குறித்த தகவலின் அடிப்படையில்  குறித்த  இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சிறுமி தற்போது மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலை பெண் நோயியல் பிரிவுக்கு நேற்று மாற்றப்பட்டுள்ளார்.

சிறுமி கூரிய ஆயுதத்தால் சித்திரவதைக்குள்ளாகியுள்ளார் என்றும்  பாலியல் ரீதியாகவும் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார் என்றும் ஆரம்ப மருத்துவ சோதனைகளின் பின் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 மாதங்களாக பாதிக்கப்பட்ட சிறுமியும் குற்றஞ்சாட்டப்படும் இளைஞனும் காதலித்துள்ளனர். சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி வீட்டுக்கு அழைத்துச் சென்ற இளைஞன் அங்கு வைத்து கொடுமைப்படுத்தியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.