Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, November 09, 2018

மர்ம நபரின் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலி ; அமெரிக்காவில் பதற்றம் !!!

Currently online
அமெரிக்க இசை விடுதி ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாயினர்.

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 40 மைல் தொலைவில் உள்ள தவுசண்ட் ஓக்ஸ் நகரில் ‘பார்டர்லைன் பார் அண்ட் கிரில்’ என்ற பெயரில் ஒரு இசை விடுதி இயங்கி வருகிறது.

நேற்று முன்தினம் இரவு அங்கு கல்லூரி மாணவர்களுக்கான இசை நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் இளைய தலைமுறையினர் திரளாக கலந்து கொண்டனர்.

இந் நிலையில் இரவு சுமார் 11.40 மணிக்கு கையில் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் அங்குள்ளவர்களை நோக்கி சரமாரியாக சுடத்தொடங்கினார். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. 

பொலிஸ் படை வருவதற்குள் அவர் பலரை சுட்டு வீழ்த்தி விட்டார். இதில் 12 பேர் உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் பொலிஸ் அதிகாரி ஆவார். 12 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்சுகளில் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், இறந்து கிடந்தது தெரிய வந்தது. அவர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டாரா அல்லது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாரா என தெரியவில்லை.

குறித்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.