Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, November 02, 2018

இந்திய மீனவர்கள் 17 பேர் நிபந்தனையுடன் விடுதலை !!

Currently online
தீபாவளியை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறையில் உள்ள 17 இந்திய மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 17 பேர் மீது கடந்த 28 ஆம் திகதி வழக்குப்பதிவு செய்த இலங்கை கடற்படையினர் யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் நேற்று ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் முன்னிலையில் மீனவர்களின் வழக்கு விசாரணைக்கு வந்தது. 

அப்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இலங்கை அரசின் பரிந்துரையைடுத்து மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்த நீதிபதி விசைப்படகின் உரிமையாளரை வரும் நவம்பர் மாதம் 23 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என உத்தரவிட்டார். 

அத்துடன் தவறும் பட்சத்தில் விசைப்படகு அரசுடமையாக்கப்படும் எனவும் உத்தரவிட்டார். 

இதனையடுத்து மீனவர்கள் மெரியானா முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.