Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, November 08, 2018

இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் 2 வீதத்தால் குறைப்பு !!

Currently online
கடந்த முதலாம் திகதி நள்ளிரவு முதல் டீசலின் விலை 7 ரூபாயால் குறைக்கப்பட்டதையடுத்து, அதன் பயனை பயணிகள் அடையும் வகையில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, பேருந்து கட்டணத்தை 2 வீதத்தால் குறைப்பதற்கு  தீர்மானித்துள்ளது.

நேற்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் இன்று(வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ள புதிய கட்டணத் திருத்தத்திற்கமைய, 12, 15, 20, 34, 41 ரூபாய் கட்டணங்களில் எவ்வித மாற்றங்களும் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று நள்ளிரவு முதல், 25, 30, 39 ரூபாய் கட்டணங்கள் மற்றும் 44 முதல் 67 வரையான கட்டணங்கள் ஒரு ரூபாயால் குறைக்கப்படவுள்ளது.

இதற்கு மேலதிகமாக 72, 75 மற்றும் 86 ரூபாயாக காணப்பட்ட பேருந்து கட்டணங்களும் ஒரு ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், 78, 81, 84 ரூபாய் கட்டணங்கள் மற்றும் 89 முதல் 114 ரூபாயாக காணப்பட்ட கட்டணங்களும் இன்று நள்ளிரவு முதல் 2 ரூபாயால் குறைக்கப்படவுள்ளன.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.