Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, November 09, 2018

மகளிர் டி 20 உலகக் கோப்பை ; இந்தியா - நியூஸ்லாந்து இன்று மோதல் !!!

Currently online
6வது மகளிர் டி 20 உலகக் கோப்பை டி 20 தொடர் மேற்கிந்தியத் தீவுகளில் இன்று தொடங்குகிறது.

இதில் நடப்பு சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்தத் தொடர் வரும் 24-ம் திகதி வரை நடைபெறும்.

வழக்கமாக ஆடவருக்கான டி 20 உலகக் கோப்பை தொடரையொட்டியே மகளிர் உலகக் கோப்பை தொடரும் நடத்தப்படும். இம்முறை முதன்முறையாக தனியாக நடத்தப்படுகிறது.

தொடக்க நாளான இன்று கயானா நகரில் நடைபெறும் ஆட்டத்தில் ஹர்மான்பிரீத் கவுர் தலைமையிலான இளம் வீராங்கனைகளை உள்ளடக்கிய இந்திய அணி, நியூஸ்லாந்து அணியை எதிர்த்து விளையாடுகிறது.

50 ஓவர்கள் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்படும் இந்திய மகளிர் அணி டி 20 வடிவில் பெரிய அளவில் சாதித்தது இல்லை. அதிகபட்சமாக 2009 மற்றும் 2010-ம் ஆண்டு நடத்தப்பட்ட டி 20 உலகக் கோப்பை தொடரில் அரை இறுதி வரை முன்னேற்றம் கண்டிருந்தது. கடைசியாக நடைபெற்ற 3 தொடர்களிலும் இந்திய மகளிர் அணி முதல் சுற்றுடன் வெளியேறியிருந்தது.

இம்முறை உலகக் கோப்பை தொடருக்கு இந்திய அணி சிறப்பாக தயாராகி உள்ளது. இலங்கை அணிக்கு எதிரான தொடர், ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான உள்நாட்டு தொடர் ஆகியவற்றில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணியினர், உலகக் கோப்பை பயிற்சி ஆட்டங்களில் மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து அணிகளை வீழ்த்தியிருந்தது. இதனால் இந்திய மகளிர் அணி மீது சற்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இன்றைய ஆட்டத்தை தொடர்ந்து இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் 11-ம் திகதி பாகிஸ்தானையும், 15-ம் திகதி அயர்லாந்தையும், 17-ம் திகதி அவுஸ்ரேலியாவையும் சந்திக்கவுள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.