Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, November 08, 2018

விபரீதமான விளையாட்டு ; உயிருக்கு போராடும் 3 வயது சிறுமி !!

Currently online
மூன்று வயது சிறுமியின் வாயில் சிறுவர்கள் பட்டாசு வைத்து வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

உத்தர பிரதேசத்தில் நேற்றுதான் தீபாவளி கொண்டாடப்பட்டது. நேற்று மாலை இந்த சம்பவம் நடந்துள்ளது.

மூன்று வயது சிறுமியின் வாயில் நான்கைந்து வெடிகளை ஒன்றாக வைத்து வெடித்து இருக்கிறார்கள். இதனால் அந்த சிறுமியின் வாய் மொத்தமாக கிழிந்து தொண்டை வரை பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை அந்த சிறுமிக்கு வாயில் மட்டும் 50 தையல்கள் போட்டு இருக்கிறார்கள்.

அவளின் உடல் நிலை தொடந்து மோசமடைந்து வருவதாகவும் சிகிச்சைகள் பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை என்றும் நாக்கு மொத்தமாக வெட்டப்பட்டு இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்த சிறுமியின் வாயில் வெடி வைத்த சிறுவர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர். அங்கிருந்த மக்கள் அவர்களை பிடிக்க முயற்சி செய்தபோது, அவர்களை தள்ளிவிட்டுவிட்டு ஓடி இருக்கிறார்கள். 

இந்த காரியத்தை அவர்கள் திட்டமிட்டு செய்திருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

அவர்கள் அதே ஊர் பகுதியை சேர்ந்தவர்கள்தான் என தெரியவந்துள்ளது பொலிஸார் அவர்களை தேடி வருகின்றனர்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.