Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, November 08, 2018

ஜிம்பாவேயில் கோர விபத்து ; 47 பேர் பரிதாப பலி !!

Currently online
ஜிம்பாவே நாட்டில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 47 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜிம்பாவே நாட்டின் தலைநகர் ஹராரேவில் இருந்து கிழக்கு நகரான ருசாபே நகரை இணைக்கும் சாலையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. 

இந்த கோர விபத்து குறித்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்தனர்.

பொலிசார் மற்றும் மீட்புக்குழுவினர் உடனடியாக விபத்து நடைபெற்ற இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை அதிகாரி பால் நியாதி, இந்த விபத்தில் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.