Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, November 10, 2018

தந்தையின் கொடூர செயல் ; 5 மாத கர்ப்பிணியான 14 வயது சிறுமி !!!

Currently online
பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தையை  பொலிஸார்  கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள நரிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். தனியார் பஞ்சாலையில் கூலி வேலை செய்து வருகிறார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது மனைவி ஜோதி வெளியூர் சென்றிருந்தார். அப்போது பாலமுருகன், தனது 14 வயது மகளை நாள்தோறும் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. 

இதனால் சிறுமி ஐந்து மாதம் கர்ப்பணியானார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த தாயார் தனது கணவர் மீது ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உடனடியாக சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அத்துடன் பாலமுருகனை கைது செய்து பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, திண்டுக்கல் சிறையில் அடைத்துள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.