Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, November 01, 2018

எதிர்வரும் 5ஆம் திகதி கூடுகிறது நாடாளுமன்றம் !!

Currently online
எதிர்வரும் 5ஆம் திகதி திங்கட்கிழமை நாடாளுமன்றம் கூட்டப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு அறிவித்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வெள்ளிக்கிழமை பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்கவை திடீரென பதவியில் இருந்து நீக்கிவிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார்.

இதனையடுத்து  நாடாளுமன்றத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதிவரை ஒத்திவைத்தார். 

இதனை தொடர்ந்து நாட்டில் பல்வேறு சர்ச்சைகளும், விமர்சனங்களும் எழுந்ததுடன் நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறும் வலியுறுத்தப்பட்டு வந்தது.

இதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல்  பதற்ற நிலைமையை தனிக்கும் வகையில் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகர் கரு ஜயசூரியவும் பலமுறை வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந் நிலையில் நாடாளுமன்றம் எதிர்வரும் 5ஆம் திகதி கூட்டப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.