Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, November 10, 2018

பாராளுமன்றம் கலைப்பு ; ஜனவரி 5ஆம் திகதி தேர்தல் !!

Currently online
நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியல் யாப்பின் 33 ஆவது உறுப்புரை 2 உப உறுப்புரையின் கீழ் அதிமேதகு ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்திற்கு அமைவாக, பாராளுமன்றம் கலைக்கப்படுவதாக ஜனாதிபதியின் கையொப்பத்துடன் அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதியன்று பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல், 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அத்துடன், வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான கால எல்லை எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடைவதாகவும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.