Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, November 06, 2018

பட்டாசு வெடித்த 6 பேர் நெல்லையில் கைது !!!

Currently online
நெல்லை சேரன்மகாதேவியில் அனுமதிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடித்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இந்த உத்தரவை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் 6 மாத சிறை தண்டனை அல்லது ரூ.ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.

இதன்படி, தீபாவளி திருநாளில் தமிழகத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறுபவர்களை கண்காணிக்க என தமிழகத்தில் 500 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதனால் பொதுமக்கள் இந்த உத்தரவை கடைப்பிடிக்கும்படி தெரிவிக்கப்பட்டது.

இந் நிலையில், நெல்லை சேரன்மகாதேவியில் அனுமதிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடித்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோன்று கோவையில் 30 பேர், திருப்பூரில் 42 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.