Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, November 01, 2018

நான் இறந்து விட்டேன்...........!!!!!! அனோத் ஆதித்யன்

Currently online
மேகத்தில் மிதந்து
வானத்தில் பறப்பதாய் உணர்கிறேன்

சற்று முன் தான்
குத்தரிசி சோறும்
எனக்கு பிடித்த கருவாட்டுக் குழப்பும்
கோவாய் சுண்டலும் சேர்த்து
விருந்து சாப்பிட்டு விட்டு திரும்புகிறேன்

எங்கே என்ற நினைவு
இதுவரை வரவில்லை

அம்மா அலருகிறாள்
அக்கா துடிக்கிறாள்
தங்கை தவித்து ஏங்குகிறாள்
அண்ணா அறிவிழந்து கிடக்கிறான்
அப்பா இடிந்து போய்
சுவர் மூளையில் முட்டி முட்டி
அழுகிறார்
உற்றார் உறவினர்
தோழர்கள் தோழிகள் எல்லாம்
விம்மி விம்மி அழுகின்றனர்

அந்த கூட்டத்தில்
யாரிடமும் சொல்ல முடியாமல்
என் காதலி உயிர் அருந்து அழுகிறாள்

இவர்கள் எல்லாம் எதற்காக
இப்படி இருக்கிறார்கள் என
ஏக்கத்தோடு சுற்றிப்பார்த்தேன்

வீட்டின் விராந்தையில் இருந்து
ஊது பத்தி வாசனை
ஒற்றை திரியோடு குத்துவிளக்கு ஒளியில்
கண்களை மூடி கால் விரல்கள்
இருக்கமாய் கட்டப்பட்டு
பட்டு உடுத்தி பூ மாலை அணிவித்து
நெற்றி பொட்டில் ஒத்தரூபாய் ஒட்டப்பட்டு
ஒரு உடலம் கிடக்கின்றது

ஐயோ.. ஐயோ...
அது என் உடலம் என்பதை
இப்போது தான் உணர்ந்தேன்
நான் இறந்து விட்டேன்
என் ஆத்மா வா இவ்வளவு நேரமும்
இதை எல்லாம் பார்த்து கொண்டிருந்தது

இது என்ன கொடுமை
என்னால் பார்க்க முடியவில்லை
நான் உங்களை எல்லோரையும்
விட்டு போகிறேன் !!!!!

இது நடைபெறும் ஒரு நாள்

           நன்றி
அனோத் ஆதித்யன்
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.