Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, November 08, 2018

கார்த்திகை மாத காவியம்.........!!!!! சுஜா தவம்

Currently online


மாதம் இத்தனை இருந்தும் 
கார்த்திகை இதில்
கறுத்து கரைந்து கண்ணீர் 
சொரிவது ஏனடி மேகமே?

மின்னி வெடித்து கூச்சலோடு
நடுங்கியபடி நீ கதறி பொழிவதும்
காற்றசைந்து கடலலை 
கொந்தழித்து போவதும் 
மாதம் இதில் ஏனடி?

வீர களத்து மண்ணில்-நல்
செந் நிற குழந்தைகள்
சில மலர்களென மலர்வதும் 
மாதம் இதில் ஏனடி?

கல்லறை கழுவிடும் 
பன்னீரோ? கண்ணீரோ? 
கார்த்திகை மலர்களோ? 
இவை காணிக்கை இதழ்களோ?
முழக்கம் மூதாதை முரசொலியோ?
மரியாதை சடங்குகளோ?

பாலை நில படுக்கையாய் 
பரவி கிடக்கும் நிலத்திலே 
மாதம் இதில் அரும்பிடும் 
செடிகள் துளிர்ப்பதும் ஏனடி ?

செழிக்கும் வேரறு மரங்களின் 
விழுதுகளோ? விதைகளோ ?
கார்த்திகையின் காரணமே
காவியமே நீ சொல்லடி.

  நன்றி 
சுஜா தவம் 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.