Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, November 05, 2018

தாயுமானவனே............!!!!!!! அன்பழகி கஜேந்திரா

Currently online
பூமிதான் சூரியனைச் சுற்றிக்கொள்ளும்
என்னைச் சுற்றும் சூரியனே...
உயிராய் எமைச் சுமந்து
அன்பால் அடைகாக்கும் அற்புதனே !

அகராதியில் இல்லையே உன்
அன்பை வசப்படுத்தும் வார்த்தைகள்...
கண்ணின் கருவிழியைக் காக்கும்
கண்ணிமைபோல் எமைக் காக்கும் காவலனே !

தாயின் பரிசத்தை உணரவைத்த
ஆண் தேவதை நீயல்லவா...
ஆழியிலே கண்டெடுத்த
அதிசய வைரம் நீயல்லவா !

என் அத்தனை பிறப்பிலும்
நீயே என் தாயாக
பிறப்பெடுத்திடுக
உன் சேயாக என்னை காத்திடுக !

கறைதந்து கண்ணீரில் தள்ளியது காலம்
கலங்காதே கண்மணியே
காலமெல்லாம் உன்னை உயிராக காப்பேன்
என்று கண்ணீர் துடைத்த மன்னவனே !

உன்னை நீங்காது என் உயிர் நாடி
உன் நெஞ்சமே நான் வாழும் நித்திய மடி..
என் உயிர் பிரிவது உன் காலடி
நீயே என் உயிர் சன்நதி !

கணவன் என்று உன்னை காண்பதில்
பிரியமில்லை எனக்கு
கடவுளாக உன்னைப் பூஜிப்பதே
வரம் எனக்கு !

         நன்றி
அன்பழகி கஜேந்திரா
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.