Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, November 07, 2018

சபாநாயகர் கரு ஜயசூரிய கட்சித் தலைவர்களுடன் இன்று அவசர சந்திப்பு !!

Currently online
சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று மாலை 3 மணிக்கு கட்சித் தலைவர்களுடன் அவசர சந்திப்பை நடத்தவுள்ளார்.

இம்மாதம் 16ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டிருந்த நாடாளுமன்றத்தை இன்று 7ஆம் திகதி கூட்டுவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றேன் என்று சபாநாயகரிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 1ஆம் திகதி வாக்குறுதியளித்திருந்தார். 

இவ் விடயத்தை கடந்த 2ஆம் திகதி நடைபெற்ற கட்சித் தலைவர்கள் மற்றும் எம்.பிக்களுடனான சந்திப்பில் சபாநாயகர் தெரிவித்திருந்தார். 

எனினும், கடந்த 4ஆம் திகதி இரவு ஜனாதிபதி இந்த வாக்குறுதியை மீறி எதிர்வரும் 14ஆம் திகதிதான் சபை கூடும் என்று விசேட வர்த்தமானி மூலம் வெளியிட்டிருந்தார்.

இதனை ஆட்சேபித்து கடந்த 5ஆம் திகதி காட்டமான அறிக்கையொன்றை சபாநாயகர் வெளியிட்டிருந்தார். 

அதில், ஜனாதிபதியின் செயல் வெறுக்கத்தக்கது எனவும் நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை மஹிந்த ராஜபக்ஷவை புதிய பிரதமராக ஏற்கவே முடியாது எனவும் வாக்குறுதியின் பிரகாரம் நாடாளுமன்றத்தை 7ஆம் திகதி கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் சபாநாயகர் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை அமெரிக்கத் தூதுவரிடமும் இந்த விவகாரத்தை நேற்று சபாநாயகர் விரிவாக எடுத்துரைத்திருந்தார்.

இருப்பினும் ஜனாதிபதி இன்று 7ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு எந்த நடவடிக்கை  எடுக்கவில்லை.

இந் நிலையிலேயே சபாநாயகர் கட்சித் தலைவர்களை இன்று மாலை அவசரமாகச் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.