Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, November 06, 2018

எங்களை கூறுபோட நினைப்பது அழிவிற்கான ஆரம்பம் ; சுமந்திரன் அதிரடி !!

Currently online
தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர், மகளிர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எங்கள் உப்பைத்தின்று ஜனாதிபதியாக வந்து இன்று எங்களையே கூறுபோட நினைப்பது அழிவிற்கான ஆரம்பம் என கூறியுள்ளார்.

மேலும் அவர்  அங்கு கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது ;

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன துரதிஸ்டவசமாக தமிழ் மக்களின் வாக்குகளால் ஜனாதிபதி ஆனவர். எங்களுடைய கட்சியை கூறு போடுவதற்கு இன்று முனைந்திருக்கிறார். இது அவருடைய இறுதிக்கான ஆரம்பம். 

அவருக்கு பகிரங்கமாக நான் சொல்லி வைக்க விரும்புகின்றேன். எங்களுடைய உப்பைத் தின்று வந்து எங்களுடைய கட்சியில் இருந்து ஒருவரை திருடி அரை அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து இருக்கின்ற அந்த மோசமான செயலை செய்த ஜனாதிபதி உனக்கு எப்படி நாங்கள் ஆதரவு கொடுக்கப்போகிறோம்?

எங்களுடைய மக்களை கூறு போடுவதற்காக உன்னை நாங்கள் கொண்டுவந்தோம்.? தேர்தலிலேயே தோற்றிருந்தால் ஆறடி நிலத்தில் போயிருப்பேன் என்று சொன்னாயே.. ஆறடி நிலத்திற்குள் போகாமல் உன்னை காப்பாற்றியது நாங்கள் அல்லவா.

இன்று எங்களை பிரித்து போடுவதற்கான சூழ்ச்சி செய்கின்ற கபடமான ஜனாதிபதியாக மாறி இருக்கின்றாய், இது உனது அழிவிற்கான ஆரம்பம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.