Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, November 02, 2018

அவர்களும் இவர்களும்............!!!!!!! எஸ் பி லக்குணா

Currently online
அரும்பு மொட்டுக்கள் பல
அரும்பி பூக்கும் முன்னே
அவர்கள் சிதைக்கப்பட்ட
அடையாளக் காற்று
நாலா திசைகளிலும்
மேலும்....மேலும் வீரியத்துடன்
கொழுந்து விட்டெரிவதை

ஒரு சினிமாவை
ரசிப்பது போல....
தினசரி நாழிதழை
படிப்பது போல....
டுவென்டி....டுவென்டி மேட்சை
எதிர் பார்ப்பது போல....

இப்போதும் போல....
எப்போதும் போல....

வேடிக்கை காட்டுபவன்
காட்டிக்கொண்டேயிருக்கிறான்-அதை
வேடிக்கை பார்ப்பவன்
பார்த்துக்கொண்டேயிருக்கிறான்

இன்னும்....இன்னும்
பல கோழிக்குஞ்சுகள்
கோரக் கழுகுகளின்
கொழுத்த பசிக்கு
தீனியாக்கப் படலாம் -என்பதினை
மறந்தவர்களாக...........!

        நன்றி
எஸ் பி லக்குணா
    வட்டக்கச்சி


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.