Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, November 05, 2018

''திமிரு புடிச்சவன்'' ரிலீஸ் திகதி அறிவிப்பு !!!

Currently online
சர்கார் படத்துடன் மோத இருந்த விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படம் இறுதி நேரத்தில் ஒரு சில பிரச்சனைகளால் தள்ளி போயுள்ளது.

தமிழ் சினிமாவில் உருவாகும் படங்கள் பெரும்பாலும் பண்டிகை நாட்களை குறி வைத்து வெளியாவது வழக்கம். அப்படி இந்த வாரமும் தீபாவளி பண்டிகையை சில படங்கள் குறி வைத்திருந்தன.

சர்கார் படத்துடன் விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன், ஆர்.கே சுரேஷின் பில்லா பாண்டி, அட்டகத்தி தினேஷின் களவாணி மாப்பிள்ளை, தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்கள் வெளியாகும் என அறிவிப்பு வெளியானது.

அதன் பின்னர் ஒவ்வொரு படங்களாக விலகி கொண்டு இறுதியில் தீபாவளி ரேஸில் சர்கார், பில்லா பாண்டி, திமிரு பிடிச்சவன், களவாணி மாப்பிள்ளை ஆகிய படங்கள் மட்டுமே இருந்தன.

இந்நிலையில் தற்போது திமிரு புடிச்சவன் படமும் தவிர்க்க முடியாத சில காரணங்களால் நவம்பர் 16-ம் திகதிக்கு தள்ளி போயுள்ளது.

இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இணையத்தில் வெளியாகி ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.