Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, November 03, 2018

மஹிந்த – மைத்திரி அரசாங்கத்துடன் இணைந்த த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் !!

Currently online
புதிய பிரதமர் மஹிந்தராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் இணைந்துகொண்டுள்ளார்.

இந் நிலையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் வியாழேந்திரனுக்கு மஹிந்த – மைத்ரி அரசாங்கத்தில் கிழக்குமாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

சதாசிவம் வியாழேந்திரன் கனடாவிற்கு சென்று நேற்றைய தினம் நாடு திரும்பியிருந்த நிலையில் அவர் மஹிந்த தரப்பினருடன் நீண்டநேரம் கலந்துரையாடிய நிலையிலேயே மஹிந்த – மைத்திரி அரசாங்கத்துடன் இணைய இணக்கம் தெரிவித்திருக்கின்றார்.

இதனை அடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதி அமைச்சராக வியாழேந்திரன் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.