Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, November 10, 2018

வீட்டுத் திட்டம் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள கோரிக்கை !!

Currently online
புதிய அமைச்சராக பொறுப்பேற்றதன் பின் யாழ். வந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வில் நேற்றையதினம் கலந்துகொண்டார். 

இந் நிலையில் அவர்  அங்கு உரையாற்றுகையில் ;
வடமாகாணத்தில் வீட்டு திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் பெயர் பட்டியலை சகல பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம சேவகர் பிரிவுகளிலும் காட்சிப்படுத்துமாறு கூறியுள்ளார்.

மேலும், மூன்றரை வருடங்களாக வீட்டுத் திட்டம் தொடர்பாக ஒன்றுமே நடக்கவில்லை. இழுபறிப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. இதனை நாங்கள் மீள ஆரம்பிக்கவுள்ளோம். அதற்கான நிதி மற்றும் சட்ட ஏற்பாடுகள் ஓரளவுக்கு பூர்த்தியாக்கப்பட்டிருக்கின்றது.

இவ்வாறான நிலையில் பயனாளிகளே தற்போது தேவையாக உள்ளார்கள். ஏற்கனவே செய்யப்பட்ட பயனாளிகள் தெரிவில் குறைபாடுகள் உள்ளதா? மாற்று அபிப்பிராயங்கள் உள்ளதா? என்பதை ஆராய்ந்து அரசியலுக்கு அப்பால் நியாயத்தின் அடிப்படையில் அதனை செய்யவேண்டும்.

எனவே வீட்டுத் திட்ட பயனாளிகளின் பெயர் பட்டியலை பிரதேச செயலகங்கள் மற்றும் கிராமசேவகர் பிரிவுகளில் காட்சிப்படுத்துங்கள் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.