Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, November 09, 2018

பிஸ்தா குல்பி செய்ய ரெடியா ??

Currently online
தேவையான பொருட்கள் 
பால் – 1 லீற்றர்
சர்க்கரை – 1/4 கப்
பிரெட் – 1 பெரிய துண்டு
பொடித்த பிஸ்தா – 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
கார்ன்ஃப்ளோர் மா – 1 டீஸ்பூன்

செய்முறை 
பிரெட்டின் ஓரங்களை வெட்டவும். நடுப்பகுதியை மிக்சியில் போட்டு அத்துடன் கார்ன்ஃப்ளோர், பால் 1/2 கப் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். 

மிதமான தீயில் ஒரு பாத்திரத்தில் மீதியுள்ள பாலை ஊற்றி கொதிக்க வைத்து அது பாதியாக சுண்டி வரும்வரை காய்ச்சவும். 

பால் சுண்டியதும் அரைத்த விழுதை சேர்த்து 5 நிமிடம் கைவிடாமல் கிளறவும். 

பிறகு சர்க்கரை, பிஸ்தா, ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து சர்க்கரை கரைந்ததும் இறக்கவும். 

ஆறவைத்து குல்பி அச்சு அல்லது டப்பாவில் ஊற்றி மூடி வைத்து, ஃப்ரிட்ஜில் வைத்து செட் செய்து துண்டுகள் போட்டு அலங்கரித்து பரிமாறவும். 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.