Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, November 09, 2018

இனந்தெரியாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் வவுனியாவில் மீட்பு !!

Currently online
இனந்தெரியாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் வவுனியா மடுகந்த பொலிஸ் பிரிவிலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ;
மடுகந்த, மயிலங்குளம் பகுதியில் மாடு மேய்ப்பதற்குச் சென்ற இளைஞர் ஒருவர் குளத்துடன் காணப்படும் வயல் கிணறு ஒன்றிலிருந்து  உருக்குலைந்த நிலையில் இருந்த சடலம் ஒன்றினை அவதானித்துள்ளார். 

பின்னர் மடுகந்த பொலிஸாருக்கு பொதுமக்கள் தகவல் வழங்கியுள்ளனர்.

மடுகந்த பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தினை பார்வையிட்டுள்ளதுடன் உயிரிழந்தவரை இனங்காணுவதற்கு பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

மடுகந்த பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டுள்ளனர்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.